எம்பெருமானருளாலே அர்த்த பஞ்சகத்தை தாம் அறிந்ததாகவும் அதில் ஒவ்வொன்றிலும் நல்தெளிவு பெற்றதையும் இத்திருவாய்மொழியிலே கூறுகிறார் ஆழ்வார். ஆகவேதான் இத்திருவாய்மொழி ஸாரமும் அர்த்த பஞ்சகத்தை ஒட்டியே தொகுக்கப்பட்டது.
வ்யாக்யாதாக்கள் சொல்வதாவது,
அர்த்த பஞ்சகம் அறிதல், முதல் நிலை.
தெளிதல், கடை நிலை.
அதாவது,
1. பர ஸ்வரூபஜ்ஞானம் என்பது
எம்பெருமானின் பரத்வம் அறிதல்,
அவன் ஆச்ரித பாரதந்த்ரியம் கண்டு தெளிதல்
2. ஸ்வ ஸ்வரூபஜ்ஞானம் என்பது,
நாம் எம்பெருமானுக்கு அடிமை என அறிதல்
பாகவத சேஷத்வமே புருஷார்த்தம் என தெளிதல்
3. உபாய ஸ்வரூபஜ்ஞானம் என்பது
எம்பெருமான் திருவடிகளே உபாயம் என அறிதல்
அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகமென்று தெளிதல்
4. புருஷார்த்த ஸ்வரூப ஜஞானம் என்பது
வழுவிலாவடிமை செய்கை புருஷார்த்தம் என அறிதல்
கைங்கர்யம் அவன் ஆநந்தத்துக்காக என தெளிதல்
5. விரோதி ஸ்வரூப ஜ்ஞானம் என்பது
அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் என அறிதல்
கைங்காரியம் என்னை அவன் செய்விக்கிறான் என தெளிதல்
ஆகவிப்படி அர்த்த பஞ்சகத்தை ஸாமாந்யரூபேணவும் விசேஷ ரூபேணவும் உணர்ந்து தெளிவு பெற்றபடியை அறிந்தறிந்து தேறித்தேறி என்றதனால் தான் பேதமை தீர்ந்தொழிந்ததாக அருளிச்செய்கிறார் ஆழ்வார்.
ஆழ்வார் உலகத்தோர் படும் துன்பங்களைப்பார்த்து மிகவும் மனம் நொந்தார்.
ஆராய்ந்து பார்க்கையில், மக்கள் துன்பப்படுவதற்குக் காரணம் தேவதாந்திர பஜனமே என்று கண்டறிந்தார். 5.2.1
எம்பெருமான் கீதையிலே मामेव ये प्रपद्यंते मायां एतां तरंति ते என்று சொன்னபடி, மக்கள் எம்பெருமானின் பரத்வம் அறிந்து, தேவதாந்திர பஜனம் தவிர்த்து, ஸ்ரீமந்நாராயணனையே தொழுதார்களானால் அவர்கள் துன்பம் நீங்குமே என்று நினைத்து எம்பெருமான் பரத்வம் பற்றி இத்திருவாய்மொழியிலேபரக்கப்பேசசுகிறார் ஆழ்வார்.
திருவாய்மொழியானது தொண்டர்கட்கு ஆனந்தத்தைப் பொழியும் இன்பமாரி.
திருவாய்மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகம் ஸ்வாமி நமமாழ்வார்.
ஏடு பார்த்துக் கற்கையன்றிக்கே ஆசார்யனிடத்தில் நன்கு அத்யயநத்தைப் பண்ணி, அர்த்தஜ்ஞானமும் பிறந்து அதற்கேற்றவாறு அனுஷ்டிப்பவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவத்வஸித்தி யுண்டாகுமென்கிறார் ஆழ்வார். 5.5.11
இத்திருவாய்மொழியை மக்தள் அனுஸந்தித்தார்களேயானால் தான் பரக்கப்பேசிய எம்பெருமானின் பரத்வம் புரிந்து மக்கள் எல்லோரும் திருந்துவர், அதனாலே ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தி ஏற்பட்டு எங்கும் பகவதனுபவம் ஏற்படும். பாபங்கள் தொலையும். நரகம் புல்லெழுந்தொழியும் என்று நமக்கு சொல்லியருளினார் ஆழ்வார்.
இப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேணும் என்று விரும்பிய ஆழ்வார் நமக்காக ஒரு ப்ரார்த்தனையும் செய்கிறார். அப்ரார்த்தனையாவது,
இமையோர்தலைவா தேவாதிராஜனே!, அடியேன் வணக்கத்துடன் சொல்லிக் கொள்ளும் வார்த்தையை மெய் நின்று அங்குமிங்கும் போய்விடப் பாராமல் நிலைத்து நின்று என் விண்ணப்பத்தை முடிய திருச்செவி சார்த்தியருள வேணும்.
விண்ணப்பம் செய்பவன் அடியேன் ஒருவனே யாகிலும், இவ்விருள் தருமா ஞாலத்தில் துவள்கின்ற மற்றும் பல ஸம்ஸாரிகளின் அநர்த்தமும் நீங்கவேணுமென்று அனைவர்க்கும் பிரதிநிதியாய் அடியேன் விண்ணப்பஞ்செய்கிறேன்.
சேஷபூதர்களான எங்களை உத்தரிக்கச் செய்வதற்காகவே,
எந்நின்ற யோனியு மாய் நாங்கள் கேட்காமலேயே இவ்வுலகில் அவ்வப்போது அவதரிக்கும் எங்கள் சேஷியான நீ,
இந்த ஸம்ஸாரநிலத்தில் பொய்யான விபரீத ஞானம் கொண்டு அஹங்கார மமகாராதிகள்கூடே, விபரீதானுஷ்டானமாகிற பொல்லாவொழுக்கம் செய்துகொண்டு திரியும் எங்களுக்கு
இவ்வழுக்கடம்புடனே திரியும் அடியோங்களுடைய ஸம்ஸாரபந்தம் தொடர்ந்து வராமல் இவ்வளவோடு அற்றுப் போகுமாறு பிறப்பு நீக்கி, ‘மோக்ஷம் தந்து
அன்ய சேஷபூதர்களான நித்யமுக்தர்களை அடிமைகொண்டு எழுந்தருளியிருக்குமாப்போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும்.
திருவிருத்தம் 1
No comments:
Post a Comment